விளையாட்டு

டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆல்-ரவுண்டர்: யார் இந்த மானவ் சுதார்?

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மானவ் சுதார் இடம்பெற்றிருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த 23 வயது ஆல்-ரவுண்டர் மானவ் சுதார் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் அணியில் அறிமுகமான மானவ் சுதாருக்கு, சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இந்திய தொப்பியை அணிவித்தார்.

டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டரான மானவ் சுதாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மானவ் சுதார் இடம்பெற்றிருந்தார்.

கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்ட மானவ் சுதார், 5 விக்கெட் வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.

ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்.