மானவ் சுதர் மானவ் சுதர்
விளையாட்டு

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார் மானவ் சுதர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகி, 7 விக்கெட் வீழ்த்திய ஆட்ட நாயகன் விருது வென்ற மானவ் சுதர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்றவர் மானவ் சுதர். இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர், இங்கிலாந்தின் பிரபலமான கவுன்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கான வார்விக்ஷயர் (Warwickshire) ஒப்பந்தம் செய்துள்ளார்.

2 போட்டிகளில் விளையாட ஒப்பந்தம்

இது தொடர்பாக மானவ் சுதர் கூறுகையில் “அடுத்த இரண்டு கவுன்ட்டி சாம்பியன்ஷிப் (County Championship) போட்டிகளுக்காக வார்விக்ஷயர் (Warwickshire) அணியில் இணைவதில் நான் மிகுந்த உற்சாகமடைகிறேன். அந்த அணி இந்த சீசனை மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. எனவே, சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான அவர்களின் முயற்சியில் நானும் ஒரு பங்காற்ற முடியும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வார்விக்ஷயர் அடுத்து ஜூன் 12-ந்தேதி யார்க்ஷயர் அணியை எதிர்கொள்ள இருக்கிறார். அதன்பின் ஜூன் 19-ந்தேி சோமர்செட் அணியை எதிர்கொள்கிறது.

129 விக்கெட்டுகள் வீழ்த்திய மானவ் சுதர்

மானவ் சுதர் 29 முதல் தர போட்டிகளில் விளையாடி 129 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து உள்நாட்டு போட்டிகளில் விளையாட உள்ளார்.

வார்விக்ஷயர் அணிக்காக விளையாடிய ஸ்ரீநாத்

ஸ்ரீநாத், குருணால் பாண்ட்யா, முகமது சிராஜ் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் வார்விக்ஷயர் அணிக்காக விளையாடியுள்ளனர்.