மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜெர்மனியின் யுவோன் லீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மாளவிகா பன்சோத் 21-17, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா 21-16, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையான ராமதானி விர்யாவனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.