விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் பிவி சிந்து தோல்வி

பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிவி சிந்து வாங் ஜி யியை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருப்பவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சிந்து தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங் ஜி யியை (சீனா) மோதினர்.

இந்த போட்டியில் பிவி சிந்து 16-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். 

SCROLL FOR NEXT