கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சிம் யூ ஜின்னை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக
சிம் யூ ஜின் 21-12 என 2வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிவி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன், காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.
பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா 2வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.