ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-
ரிகர்வ் பெண்கள் அணிகள் அரைஇறுதியில் இந்தியா-சீனா, அதிகாலை 5.55 மணி, ரிகர்வ் கலப்பு அணிகள் அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான், காலை 8.20 மணி, ரிகர்வ் ஆண்கள் அணிகள் அரை இறுதியில் இந்தியா-ஈரான், காலை 10.30 மணி.
பெண்களுக்கான 75 கிலோ இறுதிப்போட்டியில் லவ்லினா (இந்தியா)- பாவ் ஜியி (சீனா). காலை 10 மணி, 65 கிலோ இறுதிப்போட்டியில் பர்வீன் ஹூடா (இந்தியா)- நியென் சின் சென் (சீன தைபே), பிற்பகல் 2.15 மணி, ஆண்களுக்கன 80 கிலோ இறுதிப்போட்டியில் அங்குஷ் (இந்தியா)-மின்சி யோங் கிம் (தென்கொரியா), பிற்பகல் 2.45 மணி.
பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா, மாலை 3.30 மணி.
பெண்கள் 50 கிலோ தொடக்க சுற்று. தீபன்ஷி, காலை 7.08 மணி, ஆண்கள் 125 கிலோவில் ரஜத் ருஹால், காலை 7.25 மணி, பெண்கள் 76 கிலோவில் பிரியா, காலை 7.32 மணி, ஆண்கள் 65 கிலோவில் சுஜீத், காலை 8.02 மணி.