விளையாட்டு

நார்வே செஸ்சில் இரண்டு முறை மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தி பிரக்ஞானந்தா வரலாறு படைத்துள்ளார்.

நார்வே செஸ் 2026 தொடரின் கிளாசிகல் கேமில் இந்தியன் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மானஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்துள்ளார். இதன்மூலம் நார்வே செஸ்சில் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர். பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

பிரக்ஞானந்தா 8-வது சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கார்ல்சன் 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.