விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

மாலை மலர்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி,  வெண்கலம் வென்றுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.