விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்தது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றில் வென்ற இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்தது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோகி வதனாபி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் முதல் செட்டை 21-13 என எளிதில் வென்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய லக்சயா சென் அடுத்த இரு செட்களை 21-18, 21-14 என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச போட்டியில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் வென்ற பெருமையை லக்சயா சென் படைத்தார்.

சமீபத்தில் நடந்த ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரிலும் லக்சயா சென் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT