ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஆண்டன் ஆண்டர்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டென்மார்க் வீரர் 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே, ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
சமீபத்தில் நடந்த ஹைலோ ஓபன், ஜப்பான் ஓபன் தொடர்களில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.