விளையாட்டு

Singapore Open பேட்மிண்டன்: காலிறுதியில் லக்சயா சென் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், ஜப்பானின் கோகி வடநாபே உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீரர் முதல் செட்டை 21-19 என வென்றார். இதற்கு பதிலடியாக லக்சயா சென் 2வது செட்டை 21-15 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் 21-15 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.