டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் இன்று முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.
இன்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தைவானின் சவு டைன் சென் உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய தைவான் வீரர் முதல் செட்டை 21-18 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய லக்சயா சென் 2வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை தைவான் வீரர் 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.