விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் முதல் சுற்றில் வெற்றி

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் அர்னாடு மெர்கில் உடன் மோதினார்.

சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் முதல் செட்டை 21-14 என வென்றார்.

இதில் சுதாரித்துக் கொண்ட லக்சயா சென் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-16, 25-23 என போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சமீபத்தில் நடந்த ஹைலோ ஓபன், ஜப்பான் ஓபன் தொடர்களில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT