ஜமைக்காவின் ஒட்டப் பந்தய வீரர் கிஷேன் தாம்சன் 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
ஒலிம்பிக் மற்றும் உலக 100 மீட்டர் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தாம்சன், 150 மீட்டர் தூரத்தை 14.92 விநாடிகளில் கடந்துள்ளார். ஒரு விநாடிக்கு 1.3 மீட்டரை கடந்துள்ளார். புளோரிடாவில் நடைபெற்ற மிராமர் இன்விடேஷனல் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக லின்போர்டு கிறிஸ்டி 1994-ல் 14.97 விநாடிகளில் கடந்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது 32 வருடம் கழித்து .05 வினாடிகளில் தாம்சன் சாதனைப் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேயின் தபிவனாஷே மகராவு 14.96 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார்.
பெண்களுக்கான 150 மீ பந்தயத்தில் ஜமைக்காவின் கிளேய்டன் 16.87 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். பிரையனாவில்லியம் (16.92) 2-வது இடத்தையும், கிளேய்டன் சகோதரி டினா கிளேய்டன் (17.00 விநாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.