தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் யுடாய் ஒகிமோடோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய யுடாய் ஒகிமோடோ 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தருண் மன்னேபள்ளி ஆகியோரும் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.