டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்சின் அலெக்ஸ் லேனியர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-11 என வென்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 21-15, 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், பி.வி.சிந்து, இரட்டையரில் சாதவிக் - சிராக் ஜோடி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர்.