ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தென் கொரியாவின் யோ டே-பின் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் செட்டை 12-21 என இழந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த இரு செட்களை 21-18, 21-14 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் லக்சயா சென், பெண்கள் ஒற்றையரில் ரக்ஷிதா ராம்ராஜ், ஆண்கள் இரட்டையரில் சாத்விக்-சிராக் ஜோடி ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.