விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

இந்தியாவின் தன்வி ஷர்மா 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினார்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்​றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கனடாவின் விக்டர் லாய் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையரில் லக்‌ஷயா சென்னும், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா தோல்வி அடைந்து வெளியேறினர்.