ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-16 என வென்றார்.
இதற்கு பதிலடியாக ஜப்பான் வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-9 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே இந்தியாவின் லக்சயா சென், பெண்கள் ஒற்றையரில் அஷ்மிதா சலிஹா, ரக்ஷிதா ராம்ராஜ் ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.