விளையாட்டு

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்று இன்று அதிகாலை நடந்தது. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுடாய் ஒக்கிமோடோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 22-20 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக ஜப்பான் வீரர் 2வது செட்டை 21-15 என கைபற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிடாம்பி 21-19 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-15, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி அடைந்தார்.