விளையாட்டு

கேரம் உலக கோப்பையில் 3 பதக்கங்களை வென்றார் முன்னாள் சாம்பியன் காசிமா!

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றதுஇந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், காசிமா இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் வென்றார்.

அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

SCROLL FOR NEXT