ஜஸ்டின் லாங்கர் 
விளையாட்டு

ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் லாங்கர். இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் வரை உள்ளது.

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்துள்ளார்.

மூத்த வீரர்கள் பலர் லாங்கர் மீது புகார் தெரிவித்து வந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.