விளையாட்டு

Australia Open பேட்மிண்டன்: இஷாராணி பரூவா, தன்யா முதல் சுற்றில் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சீனாவின் ஹான் குயின்க்சி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பரூவா 22-20, 10-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 21-17, 21-18 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் ஈஷிகா ஜெய்ஸ்வாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் இஷாராணி பருவா, பி.வி.சிந்துவுடன் மோதுகிறார்.