விளையாட்டு

ஐபிஎல் 2026: இறுதிபோட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது? குஜராத்திற்கு 215 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது ராஜஸ்தான்.

ஐபிஎல் 2026 தொடரின் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சண்டிகரில் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்கள் அடித்தார். சதமடிக்க இருந்தநிலையில் ப்ரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். சதமடிக்காவிட்டாலும் பல்வேறு சாதனைகளை இப்போட்டியின்மூலம் நிகழ்த்தியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

அதன்படி ஐபிஎல் வரலாற்றில் சிறுவயதில் அதிவேக 1000 ரன்களை கடந்த முதல்வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் குறைந்த பந்துகளில் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் பவர்பிளே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து குஜராத் தரப்பில் ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து 215 ரன்களை இலக்காக கொண்டு குஜராத் களமிறங்கவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரை எதிர்கொள்ளும். தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

SCROLL FOR NEXT