பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 தொடரின் 58-வது லீக் போட்டி இன்று இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மும்பை அணியின் வெற்றிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் அரைசதம் விளாசினார். மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும், கார்பின், ராஜ் பவா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளது.
பஞ்சாப் அணிக்கு இது பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிப்பதற்கான மிக முக்கியமான வாழ்வா சாவா போட்டியாகும். தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளதால், புள்ளிப் பட்டியலில் தங்களின் நிலையை வலுப்படுத்த இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மும்பை அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றின் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும், இப்போட்டியில் வெல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.