விளையாட்டு

ஐபிஎல் 2026: ஜோஷ் இங்லிஸ் அரைசதம்... 204 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ - ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது லக்னோ.

2026 ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதிவருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. இங்லிஷ் அதிரடியாக விளையாடி வெறும் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

ஜோஸ் இங்கிலிஷ் 85 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளும், கம்போஜ் 2 விக்கெட்டும், நூர் அஹமத் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 204 ரன்களை இலக்காக கொண்டு சென்னை விளையாட உள்ளது.

சென்னை அணி பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்த வெற்றி மிகவும் அவசியம். தற்போது புள்ளிப்பட்டியலில் சென்னை 6-வது இடத்திலும், லக்னோ 10-வது இடத்திலும் உள்ளன. அடுத்த போட்டியும் லக்னோவை எதிர்கொள்கிறது சென்னை.