ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின், 70-வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி, நடப்பு சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் தனது கடைசி கட்ட கனவோடு இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.
69வது லீக் போட்டியும் நடைபெற்று வரும் நிலையில், அப்போட்டியில் ராஜஸ்தான் தோற்றால் மட்டுமே, கொல்கத்தாவிற்கான ப்ளே ஆஃப் வாய்ப்பும் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.