விளையாட்டு

ஐபிஎல் 2026: ஹைதராபாத்திற்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு!

தொடரின் 6வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 தொடங்கியது. தற்போதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டாஸில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.

கொல்கத்தா அணியை அஜின்கியா ரஹானே வழிநடத்துகிறார். ஹைதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் (பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில்) செயல்படுகிறார்.