ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 37வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்தவு செய்துள்ளது. அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளும் இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகள் விளையாடி உள்ள 3ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் பெற்று, புள்ளிப்பட்டியலில் சென்னை 5வது இடத்திலும், குஜராத் 7வது இடத்திலும் உள்ளன. இதனால் 4வது வெற்றியைப் பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும்.
சென்னை பிளேயிங் லெவன்
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், டெவால்ட் ப்ரெவிஸ், சிவம் துபே, கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், அகில் ஹுசைன், நூர் அஹமத், அன்சுல் கம்போஜ், குர்ஜப்நீத் சிங்
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்
சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித்கான், அர்ஷத் கான், காசிகோ ரபாடா, முகமது சிராஜ், மனவ் சுதர்