2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 54 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்தநிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.
பெங்களூரு, பஞ்சாப், ஹைதராபாத், குஜராத், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று 55வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
ஹிமாச்சல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பஞ்சாப் பேட்டிங் செய்கிறது.
கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால் இதில் வெற்றிப்பெற பஞ்சாப் முயற்சி செய்யும். மறுபுறம் ப்ளே ஆஃப் கனவை தக்கவைக்க இந்த வெற்றி டெல்லிக்கு மிக அவசியமானதாகும்.