ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பெங்களூரு அணி விளையாடிய 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 வெற்றி, 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் டெல்லி அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி பிளேயிங் லெவன்
சாஹில் பராக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, சமீர் ரிஷ்வி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்டர் பட்டேல் (கேப்டன்), துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், நடராஜன், கைல் ஜேமிசன்
பெங்களூரு பிளேயிங் லெவன்
விராட் கோலி, தேவ்தட் படிக்கல், ரஜத் பட்டிதர் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பார்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரஷிக் தார்