விளையாட்டு

டி20 போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு முன்னேற்றம் தேவை- ஸ்மிருதி மந்தனா

ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுடன் விளையாடும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

20 ஓவர் போட்டியில் சில பகுதிகளில் இந்திய பெண்கள் அணிக்கு முன்னேற்றம் தேவை என்று புதிய கேப்டனான ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் இருதரப்பு தொடரில் விளையாட உள்ளேன். முதல் முறையாக விளையாட உள்ளதால் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுடன் விளையாடும்போது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆறு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகளில் எந்தமாதிரியான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

கடந்த 1½ ஆண்டுகளில் நாங்கள் ஐ.சி.சி. உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம். சில இடங்களில் நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் இன்னும் கடின உழைப்பை வழங்க வேண்டி இருக்கிறது.

இவ்வாறு ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.

அறிமுக 20 ஓவர் சாம்பியன்ஸ் மகளிர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT