விளையாட்டு

வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி

சீன மகளிர் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் சீனாவை 238-234 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

இந்திய வில்வித்தை வீராங்கனைகள் ஜோதி சுரேகா வென்னம், சிக்கதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் தங்கப்பதக்கம் வென்றனர்.

ஆசிய விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா 7 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கஙம் என 54 பதக்கங்களுடன் 9ம் இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT