விளையாட்டு

ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய பெண்கள் அணி

இந்தியாவின் நவ்நீத், இஷிகா, லால்ரெம்சியாமி தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. நடப்பு போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியதும், 2வது போட்டியில் இந்தோனேசியாவை 17-1 என வீழ்த்தியதும், 3வது தாய்லாந்தை 20-1 என வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜப்பானைச் சந்தித்தது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் இந்தியாவின் நவ்நீத், இஷிகா, லால்ரெம்சியாமி தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் இந்திய பெண்கள் அணி ஹாக்கி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 2 தங்கம், 8, 9 வெண்கலம் என 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT