விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 2வது சுற்றில் கிரெஸ்டோ-கபிலா ஜோடி தோல்வி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரெஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் பாங்குய்- குவோ ஜின்வா ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி 21-16, 21-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதன்மூலம் இந்தியாவின் கிரெஸ்டோ-கபிலா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

SCROLL FOR NEXT