யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் ராவத்-மனீஷா ஜோடி, டென்மார்க்கின் மெட்டே வெர்கே-கோல்டிங் கிறிஸ்டோபர் ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 24-22 என முதல் செட்டை கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட டென்மார்க் ஜோடி சிறப்பாக ஆடி அடுத்த இரு செட்களை 25-23, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.