விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அரையிறுதியில் இந்தியா

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் டான் நிங் - லீயு ஷெங்ஷு ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய ஜாலி-கோபிசந்த் ஜோடி 21-18 என முதல் செட்டைக் கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

வெண்கலம் வென்ற இந்தியா

இந்தியாவின் ஜாலி-கோபிசந்த் ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஆனாலும் அரையிறுதியில் தோற்றாலும் அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சாதனை படைத்த ஜாலி-காயத்ரி ஜோடி

இதன்மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.

இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜுவாலா கட்டா - அஸ்வினி ஜோடி உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

SCROLL FOR NEXT