விளையாட்டு

China Open Badminton: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

மாலை மலர்

பீஜிங்:

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆங் யூ சின்-டியோ யே யீ ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.