விளையாட்டு

Malaysia Masters: கலப்பு இரட்டையரில் 2வது சுற்றுக்கு முன்னேறியது இந்திய ஜோடி

ஆண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராதிகா சர்மா-சாத்விக் ரெட்டி ஜோடி, ஸ்காட்லாந்தின் ஜூலி மேக்பெர்சன்-அலெக்சாண்டர் டன் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 16-21, 21-14, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் பிரிவு முதல் சுற்றில் லக்சயா சென், எச்.எஸ்.பிரனாய் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

SCROLL FOR NEXT