விளையாட்டு

ஆசிய விளையாட்டு: ஆண்கள் ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா

2028-ல் நடைபெறவுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி நேரடியாக தகுதிபெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மலேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி இடம்பெற்றது. நடப்பு போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.

இந்தியா அசத்தல்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தங்கம் வென்ற இந்தியா

இந்நிலையில், ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதன்மூலம் 2028-ல் நடைபெறவுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி நேரடியாக தகுதிபெற்றது.

மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கம் வென்றது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT