விளையாட்டு

ஆசிய விளையாட்டு: ஆண்கள் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம்

பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்று அசத்தியது.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் நடந்து வருகிறது. நான்காம் நாளில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கம் வென்றுள்ளது.

கிரிக்கெட்டில் தங்கம்

மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கமும், துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன், ஹிமான்சு தில்லான் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

10 மீட்டர் ஏர்ரைபிள் பெண்கள் அணிகள் பிரிவிலும் (இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத்), 10 மீட்டர் ஏர்ரைபிள் ஆண்கள் அணிகள் பிரிவிலும் (ஹிமான்சு தில்லான், ருத்ராங்ஷ் பாட்டீல், பார்த் மானே) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தற்காப்பு கலையில் ( மிக்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ்) சுஜிகா தாரியல் வெண்கலமும் பெற்றார்.

இன்று நடைபெற்ற பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் பிரிவில் இந்திய ஆண்கள், பெண்கள் பிரிவில் 2 வெண்கலமும் கிடைத்தன. சாப்ட் டென்னிசில் ஜெய் மீனாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பேட்மிண்டனில் வெண்கலம்

இந்நிலையில், பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.

இதில் இந்தியா 1-3 என தோல்வி அடைந்தது. இரட்டையர் பிரிவில் இந்திய அணி ஆறுதல் வெற்றி அடைந்தது.

இதன்மூலம் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

இந்தியா இதுவரை ஒரு தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT