உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 50மீ பிஸ்டல் அணி பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திரர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய அணி மொத்தமாக 1659-24X புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. சீன அணி 1648.26X புள்ளிகள் வென்றி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தென் கொரியா அணி 1643-26X புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றது.
இந்திய வீரர் ரவீந்தர் சிங் 559-11X புள்ளிகளும், சவுரப் சவுத்ரி 551-7X புள்ளிகளும், அமன்ப்ரீத் சிங் 549-6X புள்ளிகளும் பெற்றனர்.
50மீ பிஸ்டல் ஆண்கள் தனிப்பிரிவில் எந்த நாட்டையும் சார்ந்திராமல் பொதுவான ஒரு அணி மூலம் கலந்து கொண்ட அண்டன் அரிஸ்டர்கோவ் 561-9X புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.
இந்திய வீரர் ரவீந்தர் சிங் 559-11X புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். ரொமானிய வீரர் லூகா ஜோல்டியா 558-5X புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
சவுரப் சவுத்ரி 11-வது இடத்தையும், அமன்ப்ரீத் சிங் 19-வது இடத்தையும் பெற்றனர். ரவீந்தர் சிங் இரண்டு பதக்கம் வென்றுள்ளார்.