விளையாட்டு

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி

இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் சுப்மன் கில், விராட் கோலியின் சதமும், குல்தீப் யாதவின் சுழல் ஜாலமும் (4 விக்கெட்) வெற்றியை எளிதாக்கின.

அதே போன்று ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். அதே சமயம் சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் முயற்சிக்கும்.

அந்த அணிக்கு திடீர் பின்னடைவாக முதல் ஆட்டத்தில் சதம் அடித்த ஜஸ்டின் கிரீவ்ஸ் காயத்தால் விலகியுள்ளார். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SCROLL FOR NEXT