உலக கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்டேஜ் 2-ல் E பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-3 என தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
60 நிமிடங்கள் ஆட்டம் 4 பகுதியாக பிரிக்கப்படடு போட்டி நடத்தப்பட்டது. முதல் இரண்டு கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 3-வது கால் பகுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. 41-வது நிமிடத்தில் டெல்ஜென்காம்ப் அந்த கோலை அடித்தார். கடைசி கால் பகுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தினர்.
51-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஹோயிடேமேக்கர்ஸ் கோல் அடித்தார். 52-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் கோல் அடித்தர். என்றாலும் 55-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மற்றொரு வீரர் திஜ்ஸ் வான் டாம் கோல் அடித்தார்.
இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்தார். ஏற்கனவே இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது. கடைசியாக அர்ஜென்டினாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் ஒருவேளை அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்க்கலாம்.