விளையாட்டு

ஆசிய விளையாட்டு: நாளை இறுதிப்போட்டி- தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி!

17 ஆட்டத்தில் இந்தியா 14-ல், பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தங்கப்பதக்கத்துக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா மீண்டும் சாம்பியன் ஆர்வம்

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது. மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது போல ஆண்கள் அணியும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அரை இறுதியில் இலங்கையை 45 ரன்னில் சுருட்டியதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருக்கிறது.

18-வது மோதல்

இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானுடன் உலக கோப்பையில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மோதியது. இதில் இந்தியா 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் நாளை மோதுவது 18-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடைபெற்ற 17 ஆட்டத்தில் இந்தியா 14-ல், பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய இறுதிப்போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இலங்கை - வங்காளதேசம்

முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT