விளையாட்டு

ஆசிய விளையாட்டு: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முதல் போட்டியில் 13-1 என வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டின் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி இந்தோனேசியாவை 13-1 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஆண்கள் அணி

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் கொரியா, இலங்கை, வங்கதேசம், ஜப்பான், இந்தோனேசியா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

பி பிரிவில் சீனா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இந்நிலையில், இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவை இன்று எதிர்கொண்டது.

இந்தியா அபார வெற்றி

இதில் இந்திய அணி அதிரடியாக ஆடி 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்தியது. தில்பிரீத் சிங் 4 கோல்கள் அடித்து அசத்தினார்.

இந்திய அணி வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை அணியுடன் மோதவுள்ளது.

ஏற்கனவே, இந்திய பெண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT