காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .
தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட் பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11 விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.
இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.
பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர்.
ஜூடோ வீரர் அருண்குமார், ஜூடோ வீராங்கனை துலிகா மான் ஆகியோர் இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் இடை நீக்கம் செய்யப்பட்டு, போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் ஜண்டு குமார் முதல் பதக்கத்தை பெற்று தந்தார். ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.
ஜிம்னாஸ்டிக்: ஆர்ஸ்டிக் ஆண்கள் ஆல் ரவுண்ட் இறுதிப்போட்டி- யோகேஷ்வர் சிங், தபன் மொகந்தி (மாலை 4.30).
லான்பவுல்ஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா- நமீபியா மோதல் (பிற்பகல் 1 மணி முதல்), ஆண்கள் ஒற்றையர் பிரிவு-மால்டோவா வீரருடன் இந்திய வீரர் சோனோவால் மோதல் (இரவு 7.15), பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா-இங்கிலாந்து மோதல் (இரவு 10.05).
குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வார் (54 கிலோ பிரிவு) மலாவி வீராங்கனையுடன் மோதல் (இரவு 10.45), ஆண்கள் 55 கிலோ பிரிவு-இந்திய வீரர் ஜடு மணிசிங் பாகிஸ்தானைச் சேர்ந்த ரகுமானுடன் மோதல் (இரவு 11.45), ஆண்கள் 65 கிலோ பிரிவு - இந்திய வீரர் ஆதித்ய பிரதாப் யாதவ் உகாண்டாவைச் சேர்ந்த நுஹு பாட்டேவுடன் மோதல் (நள்ளிரவு 12.45).
பளு தூக்குதல்: ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு இறுதிப்போட்டி-ரிஷிகாந்த சிங் (பிற்பகல் 2.15), பெண்களுக்கான 48 கிலோ பிரிவு இறுதிப்போட்டி- மீராபாய் சானு (மாலை 6.45). ஆண்களுக்கான 66 கிலோ பிரிவு இறுதிப்போட்டி-ராஜா முத்துப்பாண்டி (இரவு 11.15)
நீச்சல்: 4x200 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சல் தகுதிச்சுற்று-ஸ்ரீஹரி நடராஜ், ஆர்யன் நெக்ரா, அனீஷ் கவுடா, தக்ஷன் சஷிகுமார் (மாலை 4.39, இறுதி நள்ளிரவு 1.56)
போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.