விளையாட்டு

ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா

இந்தியாவின் அபிஷேக் மற்றும் தில்பிரீத் சிங் தலா 2 கோல்களை அடித்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 8-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. நடப்பு போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியதும், 2வது போட்டியில் இலங்கையை 16- 1 என வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் இந்திய ஆண்கள் அணி தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் அபிஷேக் மற்றும் தில்ப்ரீத் சிங் தலா 2 கோல்களை அடித்தனர். ஷீலானந்த் லக்ரா, சுக்ஜித் சிங், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் ரஜிந்தர் சிங் தலா ஒரு கோல் அடித்தார்.

SCROLL FOR NEXT