ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நாது பார்கேடா சர்வதேச விளையாட்டு வளாகத்தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் சீனா 1–0 என முன்னிலை பெற்றது.
இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி இரண்டாவது பாதியில் சிறப்பாகச் செயல்பட்டு, அடுத்தடுத்து கோல்களை அடித்தது.
இந்திய அணி சார்பில் தீபிகா 2 கோல்களும், இஷிகா ஒரு கோலும் அடித்தனர்.
இறுதியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதற்குமுன் 2016, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றிருந்தது. நடப்பு ஆண்டிலும் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், இத்தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.