விளையாட்டு

உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

16-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டி நேற்று தொடங்கியது.

வரும் 30-ம் தேதி வரை நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.

16 நாடுகள்

ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளன.

பாகிஸ்தான், இங்கிலாந்து வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்தியா-வேல்ஸ்

இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இப்போட்டி நெதர்லாந்தின் அம்ஸ்டெல்வீனில் உள்ள வேக்னர் மைதானத்தில் நடைபெற்றது.

ஹர்மன்பிரீத் சிங் அபாரம்

இந்தியா சார்பில் சஞ்சய் 8-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 11-வது மற்றும் 43-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தார். வேல்ஸ் அணி சார்பில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில், இந்திய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.